"பட்டாணி இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்"- மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் கடிதம்
தூத்துக்குடி துறைமுகம் வழியாக பட்டாணி இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக பட்டாணி இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். வெளிநாடுகளில் இருந்து ஒன்றரை லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் பட்டாணி இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதால், தமிழகத்தில், அதனை வாழ்வாதாரமாக நம்பி உள்ள ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தூத்துக்குடி துறைமுகம் வழியாக பட்டாணி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மத்திய அரசை அவர் வலியுறுத்தி உள்ளார்.