தைப்பூசத் திருவிழா - பழனியில் கொடியேற்றம் கோலாகலம்
ஆறுபடை வீடுகளின் ஒன்றான பழனிமுருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று முதல் 10 நாட்களுக்கு வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசாமி தெய்வங்கள் தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற பிப்ரவரி 7ம் தேதியும், தைப்பூசத் தேரோட்டம் பிப்ரவரி 8ம் தேதி நடைபெறுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.