"நிதி நிலை அறிக்கை - மன நிறைவின்மை" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்து

மத்திய நிதிநிலை அறிக்கை, மன நிறைவின்மையைத் தருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-02 05:12 GMT
மத்திய நிதிநிலை அறிக்கை, மன நிறைவின்மையைத் தருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிதிநிலை அறிக்கை கலாச்சார திணிப்பை செய்யும் வகையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை, திட்டங்களும் கிடைக்கவில்லை என விமர்சித்துள்ளார். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தவிர வேறு எந்த ஒரு அறிவிப்பும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், இந்த நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட்களின் மீதான அக்கறையை நேரடி ஒலிபரப்பு செய்திருப்பதாக கூறியுள்ளார். "மூன்று கொள்கைகள்", "16 திட்டங்கள்" என்ற நிதி நிலை அறிக்கையின் கவர்ச்சி வாசகங்கள் ஏழை - நடுத்தர மக்களுக்கானது அல்ல எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் எல்.ஐ.சி தனியார் மயம் போன்றவை இந்த அரசுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை என்பதை காட்டும் வகையில் உள்ளதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்