ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு- ஆட்சியர் அறிவிப்பு
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கும், பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளுக்குமான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. மறைமுக தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்தல், பாதுகாப்பு வசதிகளுடன் தயாராக இருக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக, சிவகங்கை மாவட்டம் திருபுவனையில் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக, ஆட்சியர் அறிவித்துள்ளார்.