"டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் -ஆளுநரிடம் புகார் அளிக்க முடிவு"
போட்டித் தேர்வு மையங்களின் கூட்டமைப்பு செயலாளர் தகவல்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் விவகாரம் குறித்து, ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்கப்படும் என போட்டித் தேர்வு மையங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் செயலாளர் தமிழ் இயலன், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் அதிர்ச்சியாக உள்ளதாகவும், அது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.