"தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா : கூட்ட நெரிசலை தடுக்க சிறப்பு ஏற்பாடு"

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பக்தர்கள் வந்து செல்லும் பாதைகள் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றன.

Update: 2020-01-29 19:29 GMT
தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஏறத்தாழ 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கூட்ட நெரிசல் நிகழாமல் தவிர்ப்பதற்கும், முறைப்படுத்துவதற்கும் பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் மேற்கொண்டு வருகின்றன.குடமுழுக்கு வைபவம் நடைபெறும்போது கோயில் உள் பிரகாரத்துக்குள் வி.வி.ஐ.பி, வி.ஐ.பி, 2,000 பேர் உள்பட மொத்தம் 8,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். உள் பிரகாரத்துக்குள் செல்லும் பொதுமக்களில் 6,000 பேர் வரை அனுமதிக்கப்பட்டு, மற்றவர்களை வெளி பிரகாரத்தில் நின்று பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெளி பிரகாரத்தில் ஏறத்தாழ 15,000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். கிரிவலப் பாதையில் கோபுரம் தெரிவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், அதில் சுமார் 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்