தோட்டத்தில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் - மத்திய புலனாய்வு போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் சின்னக்கனூர் பகுதியில் கணேசன் என்பவரது தோட்டத்தில் இருந்து 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-01-18 07:04 GMT
திருப்பூர் மாவட்டம் சின்னக்கனூர் பகுதியில் கணேசன் என்பவரது தோட்டத்தில் இருந்து 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கணேசன், தன் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டை, கேரளாவை சேர்ந்த சிலருக்கு வாடகைக்கு விட்டதாகவும், அவர்கள் எரிசாராயம் தயாரித்து, கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்த தகவலின் அடிப்படையில், மத்திய புலனாய்வு போலீசார் மேற்கொண்ட சோதனையில், 450 கேன்களில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கணேசனை கைது செய்த போலீசார், கேரளாவை சேர்ந்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்