வார்டு கவுன்சிலர் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு - வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய 17- வது வார்டு கவுன்சிலர் செந்தில் முருகன் கடத்தப்பட்டதாக, வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய 17- வது வார்டு கவுன்சிலர் செந்தில் முருகன் கடத்தப்பட்டதாக, வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துறையூரைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த தொகையை மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.