மானியம் இல்லாத சிலிண்டர் விலை உயர்வு
மானியமில்லாத சிலிண்டர் விலை 19 ரூபாய் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மானியமில்லாத சிலிண்டர் விலை 19 ரூபாய் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கச்சா எண்ணெயின் விலை உயர்வு இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் மானியமில்லாத சிலிண்டர் விலை 144 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.