வாக்காளர்களுக்கு கொடுக்க பித்தளை விளக்குகள் : தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

கடலூர் மாவட்டம் ஆல்பேட்டையில் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்ட பித்தளை காமாட்சி விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-12-25 19:33 GMT
கடலூர் மாவட்டம் ஆல்பேட்டையில் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்ட பித்தளை காமாட்சி விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கடலூர் - புதுவை சாலையில் உள்ள  சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த மூட்டைகளில் பித்தளை விளக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள்  இல்லாததால்  அதனை பறக்கும் படையினர் கைப்பற்றி வாகனத்தை ஓட்டிவந்த சண்முகசுந்தரம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்