பட்டமளிப்பு விழா, மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் - குடியரசு தலைவருக்கு மதுரை எம்பி மனு

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபீஹாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நீதி வழங்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-12-25 00:48 GMT
புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபீஹாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நீதி வழங்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள மனுவில், ஹிஜாப் அணிந்தார் என்பதற்காக ஒரு  பெண் தனிமைப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று  கூறியுள்ளார். எனவே தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த ரபீஹாவுக்கு, மீண்டும் தாங்கள் அந்த பதக்கத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்