நாளை மறுநாள் எம்.ஜி.ஆர். நினைவு தினம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், நிலோபர் கபில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் எம்.ஜி.ஆரின் 32 ஆம் ஆண்டு நினைவு தின நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அ.ம.மு.க. நிர்வாகிகள் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.