அண்ணா பல்கலை விவகாரம் : மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சிறப்பு அந்தஸ்து தருவதாக கூறி, அண்ணா பல்கலைக்கழகத்தை தன் வசமாக்க மத்திய அரசு முயலுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2019-12-21 04:25 GMT
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிக்க முடிவு செய்திருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். 5 அமைச்சர்கள் கொண்ட குழுவினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்திருப்பது, உடனடியாக வெளி உலகத்திற்கு தெரியாத உள்நோக்கம் கொண்ட அறிவிப்பு என மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கொல்லைப்புறம் வழியாக அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க தமிழக அரசு முயலுவதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களையும், அதன் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளையும் காவி மயமாக்கும் திட்டத்திற்கு, இந்த சிறப்பு அந்தஸ்து என்ற கவர்ச்சி அறிவிப்பை மத்தியில் ஆளும் பாஜக அரசு, பயன்படுத்துவதாக தனது அறிக்கையில், மு.க. ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்