"துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனம் ரத்து" : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பால சுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

Update: 2019-12-20 12:15 GMT
தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். விதிமுறைகளை மீறி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன்
நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேலுமணி, பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்