கல்லூரி முன்னாள் உதவி பேராசிரியர் சடலமாக மீட்பு : சென்னை தனியார் கல்லூரி வகுப்பறையில் தற்கொலை?
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி வகுப்பறையில், முன்னாள் உதவி பேராசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி வகுப்பறையில், முன்னாள் உதவி பேராசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் காரம்பாக்கத்தை சேர்ந்த ஹரி சாந்தி என்பவர், 5 ஆண்டுகளுக்கு முன் அந்த கல்லூரியில் தெலுங்கு பிரிவில் உதவி விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது இவர், வேறு பள்ளியில் பணிபுரிந்து வரும் நிலையில், அடிக்கடி கல்லூரிக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலையில் கல்லூரி வகுப்பறையில் ஹரி சாந்தி, சடலமாக மீட்கப்பட்டார். இடது கையில் கத்தியால் கிழித்து கொண்ட ரத்த காயம் இருக்கும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.