"இரத்த நாள அடைப்பு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்" : இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், இரத்த நாள அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்ட இரு முதியவருக்கு, சவாலான அறுவை சிகிச்சை செய்து, மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையை சேர்ந்த பால்ராஜ் மற்றும் திண்டுக்கலைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோர் கடந்த 8-ஆம் தேதி வயிற்று வலியால், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவருக்கும் இரத்த நாள வீக்கம் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, இரத்த நாளங்களில் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை செய்துள்ளனர். இது மிகவும் கடினமான அரிதான அறுவை சிகிச்சை என்று கூறிய மருத்துவர்கள், இரத்த நாள நிபுணர்கள் மற்றும் மயக்கவியல் துறை நிபுணர்களின் உதவியோடு, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவித்தனர்.