கார்த்திகை தீபம் விழா : முழு வீச்சில் தயாராகும் அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கார்த்திகை தீப திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளது.

Update: 2019-11-26 06:57 GMT
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கார்த்திகை தீப திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10 தேதி அன்று கார்த்திகை தீபமான பரணி தீபம் ஏற்றப்படும். இதை ஒட்டி, பல்வேறு தெய்வ சிலைகள் வீதியுலா வரும். இதற்காக, 10 தலை ராவணன், காமதேனு பசு, வெள்ளி ரதம், நந்தி, சிம்மம், நந்தி, குதிரை ஆகிய வாகனங்களுக்கு வண்ணம்பூசி அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூத வாகனங்கள், தேர்பவனிக்கான சங்கிலி ஆகியவை புதிய வண்ணத்தால் ஜொலிக்கின்றன. துப்புரவு பணிகளும் மேற்கொள்ளப்பட்ட கார்த்திகை திருவிழாவுக்கு, அண்ணாமலையார் கோயில் தயாராகி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்