குட்கா வழக்கு : முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு சம்மன்

சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2019-11-24 15:57 GMT
கடந்த 2016ம் ஆண்டு  சென்னையை அடுத்த   செங்குன்றத்தில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான  குட்கா கிடங்கில் வருமானவரித் துறையினர்  அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய டைரியில் அமைச்சர் மற்றும் காவல் துறை, கலால்துறை , உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த  சில உயர்அதிகாரிகள் பெயர்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பாக பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர். சிபிஐ தரப்பில் ஏற்கனவே 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குட்கா வழக்கு தொடர்பாக வரும் டிசம்பர் 2 ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முன்னாள் டிஜிபி  ராஜேந்திரனுக்கும், டிசம்பர் 3 ந்தேதி ஆஜராகுமாறு சென்னை காவல்  கூடுதல் ஆணையர் தினகரனுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்