"முதலமைச்சர் பதவியேற்பு வெளிப்படையாக நடந்திருக்கலாம்" - அன்புமணி ராமதாஸ்
மகாராஷ்டிரா முதலமைச்சரின் பதவியேற்பு நிகழ்ச்சி வெளிப்படையாக நடைபெற்று இருக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதலமைச்சரின் பதவியேற்பு நிகழ்ச்சி வெளிப்படையாக நடைபெற்று இருக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பாமக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் பதவி ஏற்றிருப்பது அரசியல் விமர்சனத்திற்கு உள்ளாகும் எனவும், மகாராஷ்டிராவில் சிக்கல் இன்னும் தீரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.