"இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது" - திமுக தலைவர் ஸ்டாலின்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-23 11:21 GMT
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாநில ஆளுநரை தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசு தலைவர் மாளிகை மூலமாகவும், மறைமுக மிரட்டல் மூலமாகவும் பாஜக ஆட்சியில் உட்காந்து இருப்பது என்ன பாணி அரசியல் எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்