தமிழகம் முழுவதும் பரவலாக மழை...

கும்பகோணத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மிக கனமழை பெய்தது.

Update: 2019-11-22 04:27 GMT
கும்பகோணம் :

கும்பகோணத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக   மிக கனமழை பெய்தது. இதானல் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான பாலக்கரை, பானாதுறை , திருநாகேஸ்வரம் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. அதே நேரத்தில் வளர்ந்துவரும் சம்பா பயிருக்கு பயனுள்ள மழை என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீலகிரி :



நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பர்லியார், காட்டேரி , எடப்பள்ளி, அருவங்காடு  பாய்ஸ் கம்பெனி  பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைபாதையில்  வாகனங்களை இயக்க வாகன ஒட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனா்.

சீர்காழி :



சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரை பரவலாக தொடர் மழை பெய்தது. சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை பொதுமக்கள் சம்பா சாகுபடி பணியை  துவங்கியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்