உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட வாய்ப்பு

உள்ளாட்சி தேர்தலில் காது கேளாத, வாய் பேசாத முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயாளிகள் போட்டியிடலாம் என்ற தமிழக அரசின் சட்ட திருத்தம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ளது.

Update: 2019-11-12 20:00 GMT
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஷரத்து, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம்  ஆகியவற்றில் இடம் பெற்றிருந்தது. இதனால், உள்ளாட்சி தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகள், தொழு நோயாளிகள் போட்டியிட இயலாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், மாற்றுத் திறானாளிகள் பலர் உயர் கல்வித் தகுதி உடையவர்களாகவும், தகவல் தொடர்புத் திறன் கொண்டவர்களாகவும் உள்ளதால், நகராட்சிப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயாளிகள் போட்டியிட ஏதுவாக கடந்த ஜூலையில் தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.  தற்போது அந்த சட்டத் திருத்தம் உள்ளாட்சித் தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ளதால் தமிழகத்தில் உள்ள காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்