பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை மாற்றி வரும் ஆட்சியர் : மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு வரவேற்பு

தேனி மாவட்டத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி வரும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2019-11-04 20:44 GMT
திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் உயிரிழந்ததை தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தேனி அரசு அலுவலகங்களில் 139 பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளாக மாற்றப்பட்டு வருவதால் அதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்