முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்
தமிழகம் முழுவதும் பல்வேறு முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பல்வேறு முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஆரோகரா என கோஷம் எழுப்பி, சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, கடற்கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு, கடலில் புனித நீராடினர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பழனியில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில், சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முருகபெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் புறப்பட்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமிமலையில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரா விழா நடைபெற்றது. பால்குடம் எடுதத்தும், காவடி சுமந்தும் பக்தகர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். இரவில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. கோவை மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. அன்னையிடம் வேல் வாங்கி எழுந்தருளிய முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்தார். இதை தொடர்ந்து முருகனுக்கு வெற்றி வாகை சூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முருகனின் கோபம் தணிக்கும் விதமாக 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி விழாவில் சுமார் 5 டன் மலர்களால் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மற்ற முருகன் கோயில்களில் நடைபெற்றாலும், சூரனை வதம் செய்த முருகன் சினம் தணிந்து காட்சி தருவதால், திருத்தணியில் புஷாபஞ்சலி நடத்தப்படுவது சிறப்பு. பக்தர்கள் பல்வேறு வகையான பூக்கூடைகளை சுமந்தபடி ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மலர்களை பக்தர்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.