நெருங்கும் தீபாவளி பண்டிகை : இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு இனிப்புகளை தயாரிக்கும் பணியில் சேலம் ஆவின் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Update: 2019-10-20 12:29 GMT
தீபாவளி என்றாலே பட்டாசுக்கு பின் முக்கியமாக கருதப்படுவது இனிப்புகள்.. இந்நிலையில் சேலம் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு முந்திரி கேக், நெய் லட்டு, மைசூர்பாகு, கோவா பர்பி, மிக்சர் உள்ளிட்ட பல்வேறு இனிப்பு, கார வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிய இனிப்பு வகைகளாக கேரட் அல்வா, கோவா பர்பி ஸ்பெஷல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து ஈரோடு, நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களுக்கும் இனிப்பு வகைகள் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


Tags:    

மேலும் செய்திகள்