"வாக்காளர் பட்டியல் திருத்தம் காலக்கெடு நீட்டிப்பு" - தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தத்திற்கான காலக்கெடு வருகின்ற 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இடைத்தேர்தல் நடைபெறுகின்ற நாங்குநேரி மற்றும் விக்ரவண்டி தொகுதிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தத்திற்கான காலக்கெடு வருகின்ற 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாக்காளர் பெயர் சரிபார்ப்புப் திட்டத்தில் இதுவரை 23லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் பெயர் மற்றும் முகவரியை சரி பார்த்ததாகவும் கூறினார்.