பல்கலைக் கழக புதிய பாடத் திட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்பட்டதை கண்டித்து, திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக் கழக புதிய பாடத் திட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த திமுக மாணவரணியினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-10-01 09:52 GMT
அண்ணா பல்கலைக் கழக புதிய பாடத் திட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த திமுக மாணவரணியினர் கைது செய்யப்பட்டனர். சைதாபேட்டை சின்னமலையில் திரண்ட திமுக மாணவரணியினர், அண்ணா பல்கலைக் கழகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, பகவத் கீதை படிக்க பல்கலைக் கழகம் தேவையா, சமஸ்கிருதம் மற்றும் பகவத் கீதையை புகுத்தி, இந்தி மொழியை திணிக்கப் பார்ப்பதா என முழக்கம் எழுப்பினர். அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாணவரணிச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடவில்லை என்றும், தமிழை வைத்து தமிழை அழிக்கும் வேலையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்