அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு...? : மருத்துவ கல்லூரிகளில் வழங்க உயர் நீதிமன்றம் யோசனை

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு ஏன் வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2019-09-28 02:16 GMT
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு ஏன் வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மருத்துவ சேர்க்கை தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, இந்த கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்கள். மேலம், தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ள வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களின் விவரங்கள் பற்றியும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர்களின் விபரங்கள் மற்றும் அவங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு 10 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்