திரையரங்க ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்
சிதம்பரத்தில் திரையரங்க ஊழியர்கள் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள், காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
சிதம்பரத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மில்லர் என்பவருக்கும், திரையரங்க ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரவில் தனது சகாக்கள் 12 பேருடன் திரையங்கிற்கு சென்ற மில்லர், திரையங்கர மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதை கண்ட அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இது தொடர்பாக அமமுகவை சேர்ந்த மில்லர், நிவேஷ், அரவிந்த் ராஜ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் உள்ளிட்ட சிலரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில், மில்லர் கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.