2 வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது.

Update: 2019-09-24 10:38 GMT
மேட்டூர் அணையின் நீர் மட்டம் மொத்த உயரமான 120 அடியை எட்டியதை அடுத்து, இரண்டாவது முறையாக மீண்டும் 16-கண் உபரி நீர் போக்கி வழியாக மீண்டும் நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு இருபதாயிரம் கன அடியும், அணையின் 16- கண் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு ஏழாயிரத்து 500 கன அடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாயில் வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சுரங்க மின் நிலையங்களில் அதன் முழு அளவு உற்பத்தியான 250 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்