கரூரில் ஒரு கதவணை கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம் காவிரி புகளூர் பகுதியில் 495 கோடி மதிப்பில் கதவணை கட்டப்பட்டு வருவதாகவும், மேலும் இரண்டு கதவணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் காவிரி புகளூர் பகுதியில் 495 கோடி மதிப்பில் கதவணை கட்டப்பட்டு வருவதாகவும், மேலும் இரண்டு கதவணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் நகரம் வெங்கமேடு மற்றும் சேலம் தேசிய நெடுஞ் சாலையை இணைக்கும் வகையில் 6 கோடியே 70 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய குளத்துப்பாளையம் புதிய ரயில்வே சுரங்கப் பாதையை போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். இந்த விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தில் மற்றொரு கதவணை கட்ட அனுமதி கோரப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் சுமார் 6 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்பதுடன், நிலத்தடி நீர் பெருகி கரூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் பற்றாக்குறை என்பதே இல்லாத நிலை என தெரிவித்தார்.