நெருங்கும் தசரா பண்டிகை... விரதம் இருந்து வேடங்கள் தயாரிக்கும் தையல் கலைஞர்கள்

தசரா பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல தொழிலாளர்கள், அந்த விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் வேடங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-09-22 03:27 GMT
திருச்செந்தூரை சுற்றியுள்ள தையல் கலைஞர்கள் தீபாவளி, பொங்கலை விட தசரா பண்டிகையையே அதிகம் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு ஆர்டர்கள் வந்து குவியும் விழாவாக தசரா திருவிழா உள்ளது. பக்தர்கள் காப்பு கட்டி நேர்த்தி கடனை தொடங்கியது முதல், தாங்கள் அணியவிருக்கும் வேடத்தை உருவாக்க ஆர்டர் கொடுத்துவிடுகின்றனர். எனவே தற்போது இருந்தே திருச்செந்தூரை சுற்றிய பகுதிகளில் உள்ள தையல் கடைகளில், தசரா வேடத்துக்கான பொருட்கள் தான் கடைகளின் முன் வாசலை அலங்கரிக்கின்றன. குறவன், குரத்தி, குரங்கு, கரடி, போலீஸ், காளி, அம்மன் என பல வேடங்கள் உருவாக்கும் தையல் கலைஞர்கள், பக்தர்கள் விரும்பும் விதமாக உருவாக்கி தருகின்றனர். பக்தர்கள் மட்டுமல்ல,  தையல் கலைஞர்களும் 48 நாட்கள் விரதம் இருந்தே, இந்த வேடங்களை உருவாக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். தசரா என்றாலே பக்தர்களின் விநோத வேடங்கள் தான் முதலில் நினைவுக்குவரும், அந்த வேடங்களுக்கு பின்னால் இத்தனை கலைஞர்களின் உழைப்பும் மறைந்து கிடக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்