"முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 37 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்துடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இணைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்துடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இணைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. 7 ஆயிரம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு நடைபயணத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இதுவரை 37 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.