கோவை: மாநகரை தூய்மையாக வைக்க வீதிகளில் கோலம் வரைந்த மாநகராட்சி ஊழியர்கள்

சாலையோரங்களில் குப்பை கொட்டிய இடத்தில், சாணம் தெளித்து பூக்கோலமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது கோவை மாநகராட்சி.

Update: 2019-09-21 04:58 GMT
கோவை மாநகரை தூய்மையாக வைக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், பொது மக்களில் சிலர் பொறுப்பின்றி ஆங்காங்கே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதை தவிர்க்கும் விதமாக மாநகராட்சி ஊழியர்கள், குப்பை கொட்டிய இடத்தில் சாணம் தெளித்து, பூக்கோலமிட்டு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் உத்தரவின் பேரில் கோவை ராஜவீதி, வைசாலி வீதி., இடையர் வீதி., போன்ற பகுதிகளில் பூக்கோல விழிப்புணர்வானது நடைமுறைப்படுத்தப்படுகிறது. மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து, கொடுக்குமாறும் பொதுமக்களிடம் மாநகராட்சி ஊழியர்கள், பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும்  பாராட்டு தெரிவித்ததுடன், மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு தாங்கள் ஒத்துழைப்பு நல்குவோம் எனவும் கூறியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்