ஓமலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆன்லைன் டோக்கன் பதிவில் முறைகேடு - போலி டோக்கன்கள் கண்டுபிடித்து அழிப்பு

ஓமலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தந்தி டிவி எதிரொலியாக ஆன்லைன் பதிவிற்காக பயன்படுத்திய போலி டோக்கன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-20 09:18 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் பதிவிற்கு ஒரு நாளைக்கு 100 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் இடைத்தரகள் போலி பெயரில்  பதிவு செய்து 100 டோக்கன்களையும் பதிவு செய்வதால், ஒரு நாளைக்கு 10 முதல் 20 பேர் மட்டுமே பத்திரப்பதிவு செய்வதாகவும், இதனால் மற்றவர்கள் வாரக்கணக்கில் காத்திருந்து பத்திரப்பதிவு செய்வதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து கடந்த 18ஆம் தேதி தந்தி டிவியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக போலி டோக்கன்கள் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால், தந்தி டிவிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்