வெள்ளை நாகம் மீட்பு - வனப்பகுதியில் விடுவிப்பு
கோவையில் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட குழியில் இருந்து மீட்கப்பட்ட வெள்ளை நாகம் மதுக்கரை வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவையில் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட குழியில் இருந்து மீட்கப்பட்ட வெள்ளை நாகம் மதுக்கரை வனப்பகுதியில் விடப்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி நிபுணர் சஞ்சய் பாம்பை பிடித்து மதுக்கரை வனச்சரகர் ஆலோசனையின் பேரில் மட்டத்துக்காடு வனப்பகுதியில் பாம்பை விடுவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளதாக தெரிவிக்கும் சஞ்சய், வெள்ளை பாம்பை பார்த்தது இதுவே முதல் முறை என்று கூறினார்.