"நீர் மேலாண்மையில் தோல்வியை ஒப்புக்கொள்ளாத திமுக" - துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை

நீர் மேலாண்மையில் திமுக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்க்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-14 21:52 GMT
நீர் மேலாண்மையில் திமுக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்க்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நீர் மேலாண்மை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் திமுக ஆட்சியில் தான் காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழக உரிமைகள் தாரைவார்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
திமுக மத்திய அரசில் இரண்டு முறை அங்கம் வகித்த போது நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மை துறைகளை கேட்டு பெற்றதா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், காவிரியின் குறுக்கே ஐந்து அணைகள் கட்ட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்