சிதம்பரம் கைதை கண்டித்து உண்ணாவிரதம்
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் யசோதா தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த யசோதா, சிதம்பரத்தை கைது செய்து, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் பாஜகவின் எண்ணம் பலிக்காது என்று தெரிவித்தார்.