பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு : பெங்களுருவில் விண்ணப்பிக்குமாறு இரோம் சர்மிளாவுக்கு உத்தரவு
பெங்களூருவில் குடியேறியதால் அங்கேயே புதிதாக பாஸ்போர்டுக்கு விண்ணப்பித்து பெற கூறி இரோம் சர்மிளாக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரை சேர்ந்த இரோம் சர்மிளா, கொடைக்கானலில் வசித்து வந்தார். தற்போது பெங்களூருவில் குடியேறியுள்ள அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கணவரோடு வெளிநாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த நிலையில், தொடர்ந்து அதிகாரிகள் தாமதித்து வருவதாகவும், எனவே அதிகாரிகளுக்கு விரைவில் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையம், மனுதாரர் பெங்களூருவில் குடிபெயர்ந்த நிலையில், அங்கு புதிதாக விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெறக்கூறி வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.