திருச்சி அருகே மன்னர் கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

கோயில் குளத்தை தூர்வாரியபோது 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைமையான ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-04 21:33 GMT
திருச்சி அருகே கோயில் குளத்தை தூர்வாரியபோது, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைமையான ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. லால்குடி அருகே செம்பரை ஊராட்சியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில் குளம் தூர்வாரப்பட்டது. அப்போது,  சுமார் 50 கிலோ எடை கொண்ட சிவன், பார்வதி, அருணகிரி நாதர் ஆகியோர் இணைந்த ஐம்பொன் சிலை கிடைத்தது. 2 அடி உயரம், இரண்டரை அடி அகலம் உடைய ஐம்பொன் சிலை சுமார் 2 கோடி மதிப்புள்ளது எனவும் மன்னர்கள் கால சிலை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தகவலின் பேரில், வந்த வருவாய் துறையினர் சிலைகளை கைப்பற்றினர்.
Tags:    

மேலும் செய்திகள்