குடியாத்தத்தில் தயார் ஆன முதல் தேசிய கொடி

சுதந்திரம் பெற்றவுடன் டெல்லி செங்கோட்டையில் பட்டொளி வீசி பறந்த முதல் தேசிய கொடி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது.

Update: 2019-08-14 10:20 GMT
சுதந்திரம் பெற்றவுடன் டெல்லி செங்கோட்டையில் பட்டொளி வீசி பறந்த முதல் தேசிய கொடி, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது. நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்ற அதிகளவு கொடி தேவைப்பட்டதால் பல்வேறு நிறுவனங்களிடம் கொடி தயாரிப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம்பிச்சனூரை சேர்ந்த கோட்டா வெங்கடாசல செட்டியார், இதற்காக ஒரு மில்லியன் கொடியை தயாரித்து அனுப்பினார். இவர் தயாரித்து அனுப்பிய தேசிய கொடி தான் செங்கோட்டையில் ஏற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டு,1947 ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் முதல் தேசிய கொடியாக ஏற்றப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்