இந்தியை திணித்தவர்கள் என்ன ஆனார்கள்?" - புத்தக வெளியீட்டு விழாவில் நாராயணசாமி - வைகோ பேச்சு

சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப் பெயர்கள் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழியக்கத்தின் சார்பில், அந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தருமான விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2019-08-12 04:49 GMT
சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப் பெயர்கள் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழியக்கத்தின் சார்பில், அந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தருமான விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி புத்தகத்தை வெளியிட மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து சிறப்புரையாற்றிய புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி, நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல என்றும் ஆனால் விரும்பாத மொழியை நம் மீது திணித்தால் அதனை எதிர்த்து நாம் போராடத் தயார் என்றும் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து சிறப்புரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ, தமிழுக்கு அப்பாற்பட்ட ஒரு சொல் கூட திருக்குறளில்  கூட இல்லை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்