குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் - ஒரு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர் - விஜயபாஸ்கர்
தமிழக அரசு சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கும் திட்டத்தில் ஒரு லட்சம் பணியாளர்கள் செயல்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கும் திட்டத்தில் ஒரு லட்சம் பணியாளர்கள் செயல்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் குடற்புழு நீக்க மருந்து வழங்கும் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் சரி செய்யப்படும் என்றார்.