கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்
கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
கரூர் காந்தி கிராமத்தில் 296 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 11 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, நிர்வாக அலுவலகம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதி ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.