தர்மபுரி : ரூ.1.15 லட்சம் பணம் கட்டினால் நாளொன்றுக்கு ரூ.514 : ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட 11 பேர் கைது

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி கிராமத்தில் ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-07-29 10:42 GMT
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி கிராமத்தில் ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களிடம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கட்டினால், நாளோன்றுக்கு 514 ரூபாய் கிடைக்கும் என கூறி அந்த கும்பல் 60 லட்ச ரூபாய் வரை பணம் வசூலித்துள்ளது.இந்நிலையில், சொன்னப்படி பணம் வராததால் தங்கள் பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்ட பொதுமக்களை அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் 11 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 4 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்