சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிக்க எதிர்ப்பு - மீனவ கிராமங்களில் தொடரும் பதற்றம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சுருக்குவலை மூலம் மீன் பிடிக்க 30 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2019-07-18 10:35 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே,  சுருக்குவலை  மூலம் மீன் பிடிக்க 30 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி தரவேண்டும் என, கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து  மாவட்ட ஆட்சித்தலைவர் , சுருக்குவலை பயன்படுத்த அனுமதி அளித்தார். இதனைக் கண்டித்து, பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் உள்பட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சுருக்குவலை பயன்படுத்தி மீன் பிடித்து வரும் கடலூர் மீனவர்களின்  மீன்களை அன்னங்கோவில் துறைமுகத்தில் வாங்கவோ விற்கவோ அனுமதிக்கக்கூடாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தின் நடுவே 7 டீசல் கேன்களை வைத்து மீனவர்கள் தனிக் கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்