"உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருக்கிறது" - பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதால் இனியாவது தேர்தல் நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பினார். உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமியும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 21 ஆண்டுகளுக்கு பிறகு வார்டு வரையறை மேற்கொள்ளப்பட்டு அது தற்போது முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.