வேலூர் நாடாளுமன்றத் தொகுதி : நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி மனு தாக்கல்
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி மனு தாக்கல் செய்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி மனு தாக்கல் செய்தார். அடுத்த மாதம் 5ஆம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தீபலட்சுமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதுவரையிலும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் மற்றும் நாம் தமிழர் கட்சி தீபலட்சுமி உட்பட மொத்தமாக 17 பேர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.