உள்ளாட்சி தேர்தல் - அவகாசம் கோரிய தேர்தல் ஆணையம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பதில் மனு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட கோரிய வழக்கில், தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட கோரிய வழக்கில், தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் திமுகவினர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், மேலும் 4 மாதங்களுக்கு கால அவகாசம் கோரியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல் மக்கள அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த பதில் மனு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.