நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகளில் மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துங்கள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகளில் மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2019-07-12 18:42 GMT
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நீர் சேகரிப்பு மற்றும் நீர் நிலைகளை தூர்வாருதல் போன்ற குடிமராமத்து திட்டப் பணிகளில், பொது மக்கள் மற்றும் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். அரசின் திட்டங்கள் மக்களை சரியான நேரத்தில் முறையாக சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் அதில் ஆட்சியர்களுக்கு  உத்தரவிட்டுள்ளார். மேலும், சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தி, ஆயிரக்கணக்கான குறு நிறுவனங்களை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப் புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும், சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, உள்ளிட்டவை தொடர்பான திட்டங்கள் முறையாக செயல் படுத்தப்படுகிறதா என்பதை  கண்காணிக்கவும், அடிக்கடி நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறியவும் அதில் ஆட்சியர்களை, தலைமை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். 2 மாதத்துக்கு ஒருமுறை அனுப்பும் அறிக்கையையும் தவறாது அனுப்ப தலைமை செயலாளர் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்